Tamilnadu

News April 1, 2024

தி.மலை: ரேண்டமைஸேன் செய்யும் பணி

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலர கூட்டரங்கில் 2024 மக்களவை தேர்தலையொட்டி  தி.மலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ரேண்டமைஸேன் செய்யும் பணி இன்று (01.04.24) ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

News April 1, 2024

திருச்சியில் 100% வாக்களிக்க ராட்சத பலூன்

image

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. இதனை தேர்தல் அலுவலர் பறக்க விட்டார். உடன் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

News April 1, 2024

சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

திருச்சி பாராளுமன்ற சுயேட்சை வேட்பாளரான S. தாமோதரன் இன்று புதுக்கோட்டை லட்சுமி நகரில் உள்ள அலுவலகத்தில் கேஸ் ஸ்டவ் சின்னத்தினை பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இயற்கை வளங்கள் பாதுகாத்து காக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

திருப்பத்தூர்: சாராயம் கடத்தியவர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் (47) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

தி.மலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் & போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டு, தி.மலை & ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

News April 1, 2024

திருப்பூர் அருகே விற்பனை அதிகரிப்பு

image

உடுமலைப் பகுதியில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு ,தாராபுரம் சாலை பகுதிகளில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது ஒரு நுங்கு பத்து ரூபாய்க்கும், பதநீர் ஒரு டம்ளர் 25 ரூபாய்க்கும் விற்பனை ஆனாலும் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

News April 1, 2024

திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

image

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் 2.73 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும், வெளிநாட்டு முதலீடு இருக்கும் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி, அதன் வெளிப்பாடு இந்த வரவேற்பு என்றார்.

News April 1, 2024

தர்மபுரியில் அலுவலர் ஆய்வு

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பெட்டி இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் குரும்பட்டி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாவட்ட ஆட்சியருமான சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

News April 1, 2024

முன்னாள் எம்பிக்கு முக்கிய பொறுப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ராமசுப்புக்கு மாநில காங்கிரஸ் தலைமை முக்கிய கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளது. இவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் கட்சி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

News April 1, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!