India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது அங்கு எம்பியாக உள்ள ரவிக்குமாரே மீண்டும் களம் காண்கிறார். கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நின்ற அவர் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் பாமக இங்கு களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்டது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.இன்று சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6-வது முறை போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற அனைத்து மண்டலங்களிலும் இன்று மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள், விளம்பரங்களை மறைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி இன்று உத்தரவிட்டு உள்ளார்.
மார்ச்.1 அந்தோனியார் கோயிலில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்கும் போது 2023 அக்டோபர் மாதம் குலசேகரப்பட்டினம் தசராவில் காணாமல் போன குழந்தை உட்பட 4 குழந்தைகளை இன்று தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று 19ஆம் தேதி பாரத பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது அந்த மேடையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆர்வத்துடன் செல்பி எடுத்து சமூக வலைகளில் வெளியிட்டுள்ளார்
ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை பங்கு ஆலயத்தில் புனித சூசையப்பர் திருவிழா திருப்பலி பங்குதந்தை, உதவி பங்குதந்தையால் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தை புனி சூசையப்பர் பெயர் கொண்ட அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறகு ஆலயமணி ஓசையோடுயும், மேள, தாள முழக்கங்களுடன் இறைமக்கள் பக்தியோடும் இருகரம் குவிக்க புனித சூசையப்பர் திருகொடியிரக்கப்பட்டது .
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக பிரமுகர் ஆராமுதன் பிப்.29 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி (50) மற்றும் அவரது கார் ஓட்டுனர் துரைராஜ் (37) ஆகியோரை ஓட்டேரி காவல் துறையினர் நேற்று (மார்ச்.18) கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூரை அடுத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சந்திரன் . இவரும், இவரது நண்பர் தங்கராஜ் 2பேரும் ஸ்கூட்டரில் ராவுத்தான் மேடு பிரிவு சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தங்கராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.
மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
Sorry, no posts matched your criteria.