Tamilnadu

News January 8, 2026

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<> இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

தி.மலை: அனைத்து Certificate- உம் இனி ஆன்லைனில்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

இராம்நாடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – APPLY NOW

image

இராம்நாடு மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். (or)

2.pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

சென்னை: அனைத்து Certificate- உம் இனி ஆன்லைனில்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1,000

image

புதுவையில் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி 1,45,930 அட்டைகளுக்கு ரூ.1,000 நேரடி பண பரிவர்த்தனை மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று (ஜன.8) முதல் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News January 8, 2026

தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி வட்ட அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு ஏதேனும் புகார் தெரிவிக்க துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களின் கைபேசி எண்களையும் உபயோகப்படுத்தலாம். துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் -7824833503, தருமபுரி-9445000217, பென்னாகரம்-9445000218, பாலக்கோடு-9445000218, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி-9445000221, காரிமங்கலம்- 9445796431, நல்லம்பள்ளி- 9445796432 என கலெக்டர் அறிவிப்பு.

News January 8, 2026

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்களை வரும் ஜனவரி 12-ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.

News January 8, 2026

குமரியில் படகு சேவை தற்காலிக நிறுத்தம்

image

கன்னியாகுமரி கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News January 8, 2026

ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை!

image

சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களிடம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை இன்று (ஜன-8) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!