Tamilnadu

News March 18, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்;1800 425 7017 மற்றும் 9363754335 என்ற whatsapp குறுந்தகவல் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

கிருஷ்ணகிரி: தம்பியை தாக்கிய அண்ணன்

image

கிருஷ்ணகிரி, கே.எட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சௌந்தரராஜன். இவரது அண்ணன் சங்கர் மற்றும் இவருக்கு கூட்டு பட்டாவில் வீடு உள்ளது. சௌந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளாக HIV-யால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், இவரது அண்ணன் சங்கர் அப்பகுதியில் உள்ள அடியாட்களை வைத்து சௌந்தரராஜனை மிரட்டி பணம் மற்றும் வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

News March 18, 2024

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024 -ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அரியலூர் என்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என  ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News March 18, 2024

சென்னை: இனி அந்த பக்கம் போகாதீங்க..!

image

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

News March 18, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேரதலுக்கு 1417வாக்குச் சாவடி மையங்களும், அதில் 178 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அம்மையங்களில் வாக்குப்பதிவின் போது நேரலை வீடியோ பதிவு செய்யப்படும் என்றார்.

News March 18, 2024

சேலம் விமான நிலையம்: வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

image

பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இன்று சேலம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுச் செய்தனர். அதேபோல், ஓமலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

சேலம்: 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

image

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வர். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 18, 2024

மதுரை அருகே 7 பேர் மீது வழக்கு

image

மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

திருப்பூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு..!

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மறுபடியும் அந்த தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!