India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில தினங்களாக கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி நகா் பகுதியில் காட்டுமாடு ஒன்று நீருற்றுக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புது அத்திக்கோம்பை பகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விவசாய பணியில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். தன்னை எம்.பி. ஆக்கினார், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக விவசாயம் மண்ணை எடுத்து பெண்கள்கையில் வைத்து சத்தியம் செய்தார்.
நீலகிரியில் தேர்தல் பரப்புரை செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (4.4.24) ஊட்டி வருகிறார். நாளை காலை ஊட்டி ஏடிசி திடலில் அதிமுக சார்பாக நடக்கும் பொது கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் வினோத், சாந்தி ராமன் ((Ex. MLA) உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
இந்து அறநிலைத்துறை ஈரோடு சிறகுகள் மற்றும் தனியார் நிறுவனம் சேர்ந்து சென்னிமலை முருகன் கோயிலில் ஸ்கிரீன் டெம்பிள் ப்ராஜெக்ட் என்னும் பெயரில் மக்கும் குப்பைகளை சேகரிக்க நான்கு பெரிய ட்ரம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை வைத்து குங்குமம் மற்றும் ஊதுபத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காரைக்கால் காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் அளிக்க மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செயலிக்கு பொருத்தமான தமிழ் பெயர் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த பெயரை தெரிவிப்பவர்களுக்கு பாராட்டு கடிதம் மற்றும் சன்மானம் வழங்கப்படும் என்றும் தங்களது யோசனையை 9489205364 என்ற வாட்ஸ் அப் எனக்கு அனுப்ப காரைக்கால் காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாராளுமன்ற முன்னிட்டு காரைக்காலுக்கு மத்திய தேர்தல் பார்வையாளராக அசித்தா மிஸ்ராவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் விருந்தினர் மாளிகையில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும் 04368-293100 மற்றும் 94439 91408 என்ற எண்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவர் பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான பொருட்கள் இருப்பதையும் கண்டுபிடித்ததால் பேக்கரியை மூடி சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சோமாசிபாடி பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதில், ஜூன் 3 கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, ஜூன் 4 மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய இந்தியாவின் விடுதலை தொடக்க விழா நடைபெறும்” என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமசிப்பாடி – காட்டாங்குளம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை ஆரணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.