Tamilnadu

News March 24, 2024

கடலூரில் 58 பேர் மீது வழக்கு

image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து கடலூரில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றியும், சட்ட விரோதமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 58 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 24, 2024

அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (24.03.2024) ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News March 24, 2024

விருதுநகர் அருகே கார் விபத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி. இவர் நேற்று பைக்கில் ஸ்ரீவி – ராஜபாளையம் சாலை, மடவார்வளாகம் பகுதியில் சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கார் தங்கவேல்பாண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கார் ஓட்டி வந்த மாங்குடி பாண்டியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

தி.மலை: தாய்மார்களுக்கு முன்னுரிமை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கை குழந்தையுடன் வரும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். இந்த நிகழ்வில் எஸ்.பி கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவா உள்பட பலர் உடன் இருந்தனர்.

News March 24, 2024

நாமக்கல்லில் தயாரிக்கும் பணி தீவிரம்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்பிளர்கள் தயாரிக்கும் பணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் அரசியல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது.

News March 24, 2024

மயிலாடுதுறை, காங்., வேட்பாளர்கள் யார்?

image

மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி தொடர்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் டாக்டர்.செல்லக்குமார் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக களக்காடு பால்ராஜ் இன்று இரவுக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News March 24, 2024

பெரம்பலூர் : பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா முன்னிட்டு கடந்த 16ம் தேதி மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News March 24, 2024

விருதுநகர்: சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்…

image

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே நடைபெற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு நூறு சதவிகித வாக்கு பதிவு என்பதை வலியுறுத்தி பேசினார். பின்பு இதுவரை நடந்த தேர்தல்களில் தவறாமல் வாக்கு பதிவு செய்து அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவம் செய்தார்.

News March 24, 2024

வேலூர்: வீட்டுக்கு வீடு பிரியாணி

image

வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர் பிரியாணி செய்யும் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்டனர். மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

error: Content is protected !!