India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி, தேன்கனிகோட்டை அடுத்த பிலிமுத்திரை கிராம பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனிராஜ் என்ற வாலிபர் அவருக்கு சொந்தமான நர்சரி தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை இட்டு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி முனிராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டை பூவையார் திடலில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை (மார்ச்22) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானூர் அடுத்த புளிச்சப்பள்ளம் காலணி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டிற்கு நேற்று (மார்ச் 20) சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 பேர் இரண்டு வாகனங்களில் வந்தனர். பின்னர் செல்வக்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நடராஜர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த திருமூர்த்தி, அழகன் ஆகிய இருவரும் நேற்று (மார்ச்.20) இரவு உடுமலை மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில், பழனி செல்லும் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனும் போட்டியிடுவதற்காக தங்கள் கட்சியிடம் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சீட் வழங்கபட்டு ஒருவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிப்பெற்றவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
திருவிடைமருதூர் தாலூகா ஆவணியாபுரத்தில் இன்ஜினியரிங் மாணவர் முஹம்மது முன்தஸிரை (19), காதல் விவகாரத்தில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இஜாஸ் அகமது (20), ஜலாலுதீன் (19), சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் இஜாஸ் அகமது, ஜலாலூதின் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் 7200555395 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். ஶ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 9940353325 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம். மேலும் தாம்பரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரடியாகவே புகார் தெரிவிக்கலாம் என தொகுதிகள் தேர்தல் செலவினங்கள் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் வழங்குவதற்கு உரிய ஆவணங்கள், பதிவேடுகள் முறையாக பேணப்பட்டு இருக்கிறதா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த குழுக்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ள சந்திரமோகன் என்பவர் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக – திமுக நேருக்கு நேர் போட்டி உருவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டதையொட்டி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் ஆனந்தன் மற்றும் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் இருவருக்கும் ஆதரவான போஸ்டர் யுத்தம் நடைபெற்ற நிலையில் கூட்டணிக்காக ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.