Tamilnadu

News April 17, 2024

செந்துறை: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செந்துறை ஒன்றியம் சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் இன்று(ஏப்.17) காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 17, 2024

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா!

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று(ஏப்.17), இந்து மக்கள் எழுச்சி பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அங்கிருந்த காவலர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

News April 17, 2024

தூத்துக்குடி: கருத்துக் கணிப்பு வெளியிட தடை!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வரும் 19ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இறுதி தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

உதகை: கல்லட்டி மலை பாதையில் விபத்து

image

உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் இன்று (17 தேதி) கார் ஒன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் நான்கு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 17, 2024

வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூரில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது. வெளி மாவட்டங்களை சார்ந்த நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் . மேலும் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி முதல் (ஏப்ரல் 19) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

கிருஷ்ணகிரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ கோரமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் இன்று (ஏப்ரல் 17) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 17, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 17, 2024

சிவகங்கை: 2 நாட்கள் மதுபானக்கடைக்கு விடுமுறை

image

மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், எப்எல் 2, எப்எல்3 உரிமங்கள் உள்ள ஓட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் ஆகியவை 2 நாட்கள் மூடப்படும். இந்த தினங்களில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை

image

கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ மக்களவை தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தொழிலாளர் துறையால் மாவட்ட பொறுப்பு அதிகாரி காயத்ரி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 17, 2024

விருதுநகரில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

image

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று மாலை ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் பாக்கியராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாக்யராஜ் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!