Tamilnadu

News April 17, 2024

ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் 6 மணியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் 6 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளுதல், பண பட்டுவாடா தடுத்தல் போன்ற விதிகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News April 17, 2024

விருதுநகரில் விஜய பிரபாகரன் உருக்கம்

image

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், விஜய பிரபாகரன் பேசுகையில், எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைத்திருக்கிறது.
கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் கூறினார்.

News April 17, 2024

மெரினாவில் உலவும் சுறா எச்சரிக்கை

image

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 13ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மணிமாறன் என்பவரின் காலை சுறா மீன் கடித்ததாகவும் அவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News April 17, 2024

தேனியில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று(ஏப்.17) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 17, 2024

திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து

image

சென்னை 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று சென்னை மற்றும் வெளி மாவட்டத்தில் 1,168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 17, 2024

ராணிப்பேட்டை அருகே 3 பேர் கைது

image

பாணாவரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் மகள் பாணாவரம் அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். இவரை பழையபாளையம் பகுதியை சேர்ந்த அப்பு(19) கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை ஏழுமலை, அண்ணன் சூரியை, அப்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி கத்தியால் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்பு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நேற்று முன்தினம் பாணாவரம் போலீசார் கைது செய்தனர்.

News April 17, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

நாமக்கல்: கவனத்தை ஈர்த்த சுவரொட்டி

image

மக்களவைத் 24 நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா வாக்குப்பதிவுக்கான இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 19 அன்று அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News April 17, 2024

செங்கல்பட்டு: சாத்துக்குடி பழங்களில் பிரமாண்ட மாலை

image

செங்கல்பட்டு மாவட்டம் குண்டூர் பகுதியில், இன்று(ஏப்.17) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கிரேன் மூலம் ராஜசேகருக்கு சாத்துக்குடி பழங்களாலான ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செயலாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 17, 2024

கடலூர்: ஆட்சியர் அறிவிப்பு!

image

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 19ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 18004253168 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!