India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் 20 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூலை 4) உத்தரவிட்டார். அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலக பொது மேலாளராக இருந்த பாலமுருகன், நீதியியல் அலுவலக மேலாளர் பழனி, வேலூர் தாசில்தார் கோபி உள்ளிட்ட 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி 40 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமை காவலர் கிரேட் ஒன் காவலர் மற்றும் காவலர்கள் என 50 பேரை இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் அனைத்து துறைகளிலும் சேர்வதற்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு கூட்டத்தின் கடைசி நாள் ஆக.,8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆக.,8 அன்று இறுதி கலந்தாய்வில் பங்கெடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திருவண்ணாமலை குறுமைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ‘ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ரத்த கொடையாளருக்கு நன்றி’ என்ற கருபொருளுடன் பின்பற்றபட்டது . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 107 ரத்த தானம் முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டம ஆட்சியர் கே. எம் சரயு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று (4 -7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் இன்று(ஜூலை 5) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம், கம்பு சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.