Tamilnadu

News July 5, 2024

திருவண்ணாமலையில் ஆலோசனைக் கூட்டம்

image

டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திருவண்ணாமலை குறுமைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.

News July 5, 2024

9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ‘ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ரத்த கொடையாளருக்கு நன்றி’ என்ற கருபொருளுடன் பின்பற்றபட்டது . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 107 ரத்த தானம் முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டம ஆட்சியர் கே. எம் சரயு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 5, 2024

கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று (4 -7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 5, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் இன்று(ஜூலை 5) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

விழுப்புரத்தில் 4 நாட்கள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2024

சர்வதேச சிலம்பம் போட்டி: மாணவிக்கு பாராட்டு விழா

image

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம், கம்பு சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.

News July 5, 2024

திருவள்ளூர்: வட்டாட்சியர் உள்ளிட்ட 3 பேர் பணியிட மாற்றம்

image

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் வண்டி பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் நிகழ்வில் ராஜ்குமார் என்பவர் தீக்குளித்து சென்னை கேஎம்சி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 4, 2024

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் சிவகுமார் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் 7வது சம்பளக் குழு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் இந்த பரிந்துரையை வேண்டாம் எனக் கூறி 6வது சம்பள குழு சம்பளத்தை பெற்று வருகின்றனர். 6வது சம்பள குழு சம்பளம் பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி இந்த மாதம் 1ஆம் தேதி முதல் 221% இருந்து 230%ஆகவும் ஜனவரி 1 முதல் 230% இருந்து 239% உயர்த்தப்பட்டுள்ளது.

News July 4, 2024

திருப்பூர்: 13 எஸ்.ஐ இடமாற்றம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் 13 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை இட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா இன்று (ஜூலை 4) உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 18 எஸ்.ஐ இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 13 எஸ். ஐ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் இன்றே புதிய பணியிடங்களுக்கு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 4, 2024

அக்னி வீர் வாயு விமான படை தேர்வு

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!