India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது. நேரடி சேர்க்கைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15. தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அஇஅதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.கோபாலகிருஷ்ணன் இன்று காலை 6 மணி அளவில் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் குன்னூர் நகர மன்ற தலைவராகவும், கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆகவும் பதவி வகித்தார். இவரின் மறைவு குன்னூர் பகுதி அஇஅதிமுக நிர்வாகிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் ரூ.75.63 கோடி மதிப்பீட்டில், பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின்கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.17,500-க்கு 5 ஆடுகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள் நிலமற்ற, ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களாக இருக்க வேண்டும். 60 வயதுக்குட்பட்டோர் நாகர்கோவில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என குமரி ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் பணியாற்றும் படை வீரர்கள் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஜூலை 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வழங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கலெக்டர் இரா.பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் தற்போது 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை, இணையதளதரவுகள் மூலம் சரிபார்க்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாரு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 8.7.2024 அன்று முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை கோட்டாட்சியர் தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று மாலை 5 மணிக்கு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், உரிமம் பெற்ற சர்வேயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 15 நாட்களுக்குள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் செய்து தரப்படும். உட்பிரிவு பட்டா 30 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிலுவை விண்ணப்பங்கள் குறைவாகவே இருக்கின்றன. இனி இணைய தளம் வாயிலாக அப்ரூவல் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையின் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் ஒரு நாள் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட அதிமுகவினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ஊராக உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற அச்சத்தில் கடந்தமுறை போட்டியிட்ட பலரும் தற்போது போட்டியிட மறுப்பு தெரிவித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.