India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதலே சென்னைக்கு மக்கள் அதிக அளவு சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இன்று (ஏப்ரல் 22) காலை 10.30 மணியளவிலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் தேவைக்கேற்றவாறு பேருந்துகளை அதிகப்படுத்தி இயக்கி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலையோர குளிர்பான கடைகளில் தாகம் தணிப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மானூர் வட்டார பகுதிகளில் அதிகாலை விற்பனைக்கு கொண்டுவரப்படும் இளநீர் காலை 10 மணிக்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன . ஒரு இளநீர் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று கூறுகையில், “தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை” என தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் நடந்த ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருகிறது. இந்த அழைப்பில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் ? அதிமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும், திமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும் என கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருநாகேஸ்வரம், அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இதனை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைய இணை இயக்குநர் வான்மதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் RTE – மூலம் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை இன்று ஏப்ரல்.22 முதல் மே மாதம் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனwww. tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்தவுடன் பெற்றோர்களின் செல்போன் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் எனவும் அதிக அளவில் பதிவானால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பின் 20 அம் தேதி கடை திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 74 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தமிழக அளவில் மதுரை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை(ஏப்.19) புறக்கணித்து வாக்களிக்காமல் இருந்தனர். இது குறித்து, சமாதானம் பேசி ஓட்டுப்போட அழைப்பதற்காக வட்டாட்சியர் அப்பகுதிக்கு சென்றார். அப்போது, மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டது தொடர்பாக கிராம மக்கள் 10 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.unom.ac.in/ என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், பொருளாதாரத்தில் பின்தங்கியும் உள்ள மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.