Tamilnadu

News April 24, 2024

மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா

image

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. தற்போது மலைக்கோட்டை கிரிவலப் பாதையை மேளதாளத்துடன் தேர் பவணி வந்து கொண்டிருக்கிறது. இத்தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தனர். இதனால் அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 24, 2024

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 23-ம் தேதி மூடப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

ஈரோடு ஆட்சியர் அழைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 22ஆம் தேதி) முதல் மே 20ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 23-ம் தேதி மூடப்படும். என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

மதுரை மக்களே 4 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்

image

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 104.36 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவானது. இதனால் பிற்பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைந்த அளவே காணப்பட்டது. இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இதேபோல் வெப்பநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

News April 24, 2024

மே 1 முதல் சம்பல்பூர் – ஈரோடு சிறப்பு இரயில் இயக்கம்

image

ஒடிசா மாநிலம், சம்பல்பூரிலிருந்து மே 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இரயில் (எண்:08311) மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். பின் மறுமாா்க்கமாக இந்த இரயில் (எண்:08312) மே 3 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News April 24, 2024

சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலி

image

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் டாணா வாட்ச்மேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியன் (56). இவர் ஆம்பூர் மெயின் ரோட்டில் நேற்று (ஏப்.21) நடந்த சென்றபோது அவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 24, 2024

ராமநாதபுரம் அருகே கூடுதல் வரி வசூல்

image

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோல் தைத்து தருபவர்களிடம் நகராட்சி நிர்வாகம் 100 ரூபாய் முதல் வரி வசூல் செய்கின்றனர். வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் இவர்களிடம் நகராட்சி நிர்வாகம் கூடுதல் வரி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News April 24, 2024

திருமணத்திற்கு சென்று திரும்பிய வாலிபர் பலி

image

பொன்னேரி அடுத்த பழவேற்காடு செம்பாசிபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (26). இவர் நேற்று பெரியபாளையத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு விடியற்காலை வீட்டிற்கு பைக்கில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம் சாலை கல்வெட்டில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

பழனி: பால் வியாபாரிக்கு சரமாரி வெட்டு

image

பழனி அருகே ஆயக்குடியில் இன்று அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. குடும்பத்தகராறு காரணமாக உறவினர் ராம்குமார் என்பவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கன்றனர்.

error: Content is protected !!