Tamilnadu

News April 24, 2024

நாமக்கல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மக்களவை தேர்தல் முடிவுற்றுள்ளன நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று (22.4.2024) பதிவான மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையத்தில் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

News April 24, 2024

இலஞ்சி திருமலைக்குமரன் கோவில் தேர் திருவிழா

image

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் பிரசித்தி பெற்ற திருக்குமரன் திருக்கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 24, 2024

கிருஷ்ணகிரி: 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

image

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மும்முரமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் கெலமங்கலம் போலீசார்
தடிகல் அருகே உள்ள கொடியூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் மற்றும் அவர்கள் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

News April 24, 2024

குமரி: மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்

image

குமரி மாவட்டம் மண்டைக்காடு முருகேசன் – மகேஸ்வரி தம்பதியின் மகள் ஹரிஷ்மா தேவிக்கும், அம்மாண்டிவிளை அருள்துரை – கங்காவதி தம்பதியரின் மகன் அருண் பிரகாசுக்கும் நேற்று(ஏப்.21) கருமண் கூடலில் திருமணம் நடந்தது. பின்னர் புது மணத்தம்பதிகள் காளை மாட்டு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர். இதை பலரும் வரவேற்றனர்.

News April 24, 2024

“புதிய அங்கன்வாடி மையம் அமையுமா?”

image

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமேடு கிராமத்தில், அங்கன்வாடி மையத்தில், 12 குழந்தைகள் படிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் சேதமடைந்தது. இதை சீரமைத்து புதிய அங்கன்வாடி மையம் திறாக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

News April 24, 2024

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஏப்.22) குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பென்னாகரம் அடுத்த மூங்கில் மோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் ஓடை புறம்போக்கு வழிப்பாதை எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.

News April 24, 2024

தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை

image

திருவாரூர்: 2024-2025ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக, இன்று முதல் மே 20 வரை<> https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரியச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

புதுவையில் ரேஷன் கடைகள் திறக்கப்படும்

image

காரைக்காலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் வெற்றி பெற்றவுடன் புதுச்சேரி மாநிலத்தில் மூடி உள்ள ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து மாநில மக்களுக்கு இலவச அரிசிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

News April 24, 2024

காஞ்சிபுரம்: பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல்(21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் இன்று வழக்கம்போல் பைக்கில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் சாலை வளைவில் திரும்பியபோது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மைக்கேல் உயிரிழந்தார்.

News April 24, 2024

சாலையின் தடுப்பில் மோதி கொத்தனார் பலி

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் தினேஷ் என்பவருடன் காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!