Tamilnadu

News July 1, 2024

மருத்துவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

image

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித குலத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக சேவையாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும், எனது இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

அக்னிவீர் வாயு தேர்விற்கு விண்ணபிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வு நடைபெறுகிறது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

News July 1, 2024

குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருப்பத்தூா் மாவட்டத்தில் 94,868 குழந்தைகளுக்கு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், வைட்டமின் – ஏ சத்து குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்கும் முகாமானது இன்று(ஜூலை 1) முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News July 1, 2024

உலக வங்கியில் ரூ. 3000 கோடி கடன் 

image

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கோழிப்பட்டு பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவ திட்டங்களுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி மதிப்பீடு தயார் செய்து உலக வங்கியில் கடன் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

News July 1, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

சுதந்திர தின விழாவின் போது சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், தனித்தன்மையுடன் கூடிய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

மாசோலை மக்களை சந்திக்கும் கிருஷ்ணசாமி

image

புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அந்த மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. 100 ஆண்டுகளாக வசிப்பவர்களை கட்டாய விருப்ப ஓய்வு கடிதம் பெற்று வெளியாற்ற நினைப்பத்தாக கூறினார். இன்று(ஜூலை 1) மாஞ்சோலை மக்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

News July 1, 2024

குமரி காங்கிரஸ் நிர்வாகிக்கு வாழ்த்து

image

குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக குழித்துறை பகுதியை சேர்ந்த ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள அவரை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பிர் ராஜேஷ்குமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண்துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News July 1, 2024

திருவள்ளூரில் பெய்த மழை அளவு விவரம்

image

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூலை 1) காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டியில் 1.6 செ.மீ, பொன்னேரி 1.5 செ.மீ, ஆவடி 1 செ.மீ, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டையில் தலா 3 மி.மீ, சோழவரத்தில் 2 மி.மீட்டரும், செங்குன்றத்தில் 1 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.47 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!