Tamilnadu

News July 1, 2024

விருதுநகர்: பட்டாணி, சர்க்கரை விலை குறைந்தது

image

விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி மற்றும் சர்க்கரை விலை குறைந்தது. சர்க்கரை 100 கிலோவிற்கு ரூ.80 விலை குறைந்து ரூ.4,180 ஆகவும், பட்டாணி 100 கிலோவிற்கு ரூ.1,500 குறைந்து ரூ.4,500 ஆகவும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை குறைந்து ரூ.2,750 ஆக விற்பனையானது

News July 1, 2024

காலை உணவு திட்டம் விரிவுபடுத்துதல் குறித்த கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திட்ட இயக்குநர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 1, 2024

சிவகங்கையில் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

image

காளையார்கோவில் அடுத்த பாண்டியன் கோட்டையில் தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தலைமையில் நேற்று பலர் கள ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வட்ட சில்லுகள், ஓட்டு எச்சங்கள், செங்கல் எச்சங்கள் மற்றும் 2000 ஆண்டுகள் பழமையான தமிழில் மோசிதபன் என எழுதப்பட்ட பானை ஓடும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பழமையை அறிந்து கொள்ள தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 1, 2024

திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் ரத்து

image

திருச்சி ரயில்வே கோட்ட நிறுவனம் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மானாமதுரை-ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி  இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுகிறது.

News July 1, 2024

கரூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

image

கரூா் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு அனைத்திற்கும், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் ஜூலை 1 முதல் 10ஆம்தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தங்கவேல் நேற்று அறிவித்துள்ளார்.

News July 1, 2024

விருதுநகரில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 6 காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் இன்று காலை 11 மணி முதல் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9486553544, 6374050289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News July 1, 2024

அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைப்பாளர்

image

கைத்தறி மானிய கோரிக்கையில் நெசவாளர்களுக்கு 10% கூலி உயர்த்தி அறிவித்ததற்காக, அமைச்சருக்கு நேற்று(ஜூன் 30) ராணிப்பேட்டை மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் குலோத்துங்கன் நன்றி தெரிவித்தார். பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்.

News July 1, 2024

மருத்துவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

image

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித குலத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக சேவையாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும், எனது இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

அக்னிவீர் வாயு தேர்விற்கு விண்ணபிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வு நடைபெறுகிறது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

News July 1, 2024

குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருப்பத்தூா் மாவட்டத்தில் 94,868 குழந்தைகளுக்கு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், வைட்டமின் – ஏ சத்து குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்கும் முகாமானது இன்று(ஜூலை 1) முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!