Tamilnadu

News April 24, 2024

உலக பூமி தின கொண்டாட்டம்

image

திருவண்ணாமலை நேற்று உலக பூமி தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நகரின் பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்கள் குப்பைகளை அகற்றியும் புனித தீர்த்த குளத்தை சுத்தம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நகரின் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு மக்களிடையே மண் வளத்தை காப்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

News April 24, 2024

ராணிப்பேட்டை: கோடையில் சீரான குடிநீர் – ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஏப்.22) நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி, டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 24, 2024

விடியற்காலை பொங்கல் வைத்த பொதுமக்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இன்று (ஏப்ரல்.23) சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று விடியற்காலை ஒரு மணி முதல் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நாட்றம்பள்ளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 24, 2024

வட்டக்கானலில்  பார்க்கிங் வசதி தேவை

image

கொடைக்கானலில் கடைக்கோடியில் உள்ளது வட்டக்கானல் அருவி. இந்த அருவி அருகே டால்பின் நோஸ் பகுதியும் உள்ளது. இதில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. வட்டக்கானல் பகுதியில் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாத சூழலில் ரோட்டோரமே நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News April 24, 2024

தீ வைத்துக் கொண்ட விவசாயி உயிரிழப்பு

image

குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (65). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News April 24, 2024

திருத்துறைப்பூண்டி- பத்ரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

image

திருத்துறைப்பூண்டி அருகே ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 24, 2024

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

image

ராம்நாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று (ஏப்.22) முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆதாரத்துடன்கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 24, 2024

வேலூர்: முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த எம்எல்ஏ

image

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேற்று (ஏப்ரல் 22) சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

News April 24, 2024

நெல்லை: வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

image

துபாயில் 21வது ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நாளை (ஏப்.24) முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த கனிஸ்டா டீனா பங்கேற்று ஓட உள்ளார். இந்த வீராங்கனைக்கு திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வீரர்கள், சமூக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News April 24, 2024

வேலூர் எஸ்.பி. கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 22)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 23 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார். ‌

error: Content is protected !!