India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 27) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 740 லிட்டர் கள்ளச்சாராயம், 50 பாக்கெட் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மற்றொரு அறிவிப்பில், ராம்நாட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குக் கண்ணாடி செலவை ஈடு செய்வது மற்றும் முதியோருக்கான உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலரை சந்தித்து விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று 110 விதியின்கீழ் அறிவித்தார். இதையடுத்து, கொமதேக பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன், விமான நிலையம் அமைக்கின்ற இடம் பெங்களூருவை ஒட்டிச் செல்லாமல் (ஏனென்றால் பெங்களூருவில் விமான நிலையம் உள்ளது), கிருஷ்ணகிரி அருகே அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிரை பொறுத்து அவர்கள் கடன் தரும் வங்கிகள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று (ஜூன்.27) வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், நில உடைமை ஆவணம், ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய் துறை சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து மொத்தம் 83 பேர் மனு அளித்தனர்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், பெங்களூருவிலிருந்து 150 கிலோமீட்டருக்குள் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பது விதி; எனவே அது சாத்தியமில்லாதது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், பேருந்துகளை கூட வாங்காத திமுக அரசு, விமான நிலையம் அமைப்பதாக கூறுவது நகைச்சுவை என கிண்டலாக தெரிவித்தார்.
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வேண்டி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது மனுவை நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.