India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் முனியசாமி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர் ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை ஏப்.30-க்கு ஒத்திவைத்தார்.
ரயில் நிலையங்களின் வருமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின்படி 2013 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மதுரை கோட்டத்தில் முதல் 50 இடங்களை பிடித்துள்ள ரயில் நிலையங்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரூ.130 கோடி வருமானத்தை அள்ளி கொடுத்து திருநெல்வேலி ரயில் நிலையம் 2023-24ஆம் நிதி ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 22) வெயில் அளவு 106.7°F ஆக பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களான லட்சுமணன், கந்தசாமி மத்திய அரசின் மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் ‘ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் மாடு, சீர்வரிசை தட்டுகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலியின் எச்சம், சணல் கயிறு, கான்கிரீட் கற்கள் இருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு சம்பந்தப்பட்ட துறையை கண்காணித்து தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அரங்கத்தில், இன்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குள்ளப்புரம் பகுதியை சேர்ந்த சித்திரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 2022-ம் ஆண்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் துரைப்பாண்டி, பரமன், பெரியபாண்டி ஆகியோர் ஜெயமங்கலம் போலீசாரால் கைது செய்யபட்டு வழக்கு விசாரணை பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (ஏப்.22) துரைப்பாண்டி, பெரியபாண்டி , பரமன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ளது அருந்தவபுரம். இந்த ஊரின் குளக்கரை அருகே இருந்த பெரிய அரச மரத்தின் வேர் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக அரன்பணி அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது 3.75 அடி உயரத்திலான ஆவுடையுடன் சிவலிங்கம் இருந்தது. இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் கொண்ட சோழர் காலத்தை சேர்ந்த சிவலிங்கம் என கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தாளவாடியில் உள்ள அரசு மதுபான கடை (கடை எண் : 3948) மற்றும் அதனுடன் இயங்கும் பார் ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.