Tamilnadu

News April 24, 2024

மதுரை மக்களே உஷார்… போலீசார் எச்சரிக்கை

image

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களும் நடைபெறும். எனவே பக்தர்கள் ஒவ்வொருவரும் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 24, 2024

தாய்மாமனுக்கு ஸ்கெட்ச் போட்ட கணவன் 

image

பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மீனா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  மீனாவின் தாய் மாமனான ஜெகதீஸ்வரன் வீட்டில் மீனா வசித்து வருவதால், ராம்குமார் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று காலை ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.

News April 24, 2024

தி.மலையில் 5000 போலீசார் குவிப்பு

image

சித்ரா பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பாதுகாப்புப் பணியில் 5000 போலீசார், 184 தீயணைப்பு வீரா்கள் மற்றும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனோடு, 15 தீயணைப்பு வாகனங்கள் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News April 24, 2024

சேலத்தில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல்

image

மதுரை ரயில்வே போலீசாருக்கு, பைகாரா பகுதியை சேர்ந்த விஏஓ பெயரில் கடிதம் வந்தது. அதில், பைகாரா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், கடித முகவரியை தொடர்பு கொண்ட போது அதில் பேசியவர், தான் விஏஓ ஆக இருப்பதாகவும், முன்விரோதத்தில் தன்னுடைய பெயரில், யாரோ கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

தருமபுரியில் 106 டிகிரி!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஏப்.22) அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதன்படி, முதலிடமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், 2வதாக தருமபுரி, திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

News April 24, 2024

வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்

image

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 27 இல் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும்” தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் பி. சுப்பிரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

குமரியில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

மக்களை பாதுகாக்க ஆணையாளர் முடிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளை (ஏப்.23) உப்பு சர்க்கரை நீர் கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

தூத்துக்குடி: வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் காயம்

image

சங்கரன்கோவில் பூவலிங்கபுரத்தை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று இரவு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். இவர்களின் வேன் எட்டையாபுரம் அருகே வரும் பொழுது எதிரே வந்த மினி லாரி மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி எட்டையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!