Tamilnadu

News June 28, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் தீர்வாயம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று (ஜூன்.27) வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், நில உடைமை ஆவணம், ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய் துறை சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து மொத்தம் 83 பேர் மனு அளித்தனர்.

News June 28, 2024

“ஓசூரில் விமான நிலையம் என்பது நகைச்சுவை”

image

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், பெங்களூருவிலிருந்து 150 கிலோமீட்டருக்குள் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பது விதி; எனவே அது சாத்தியமில்லாதது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், பேருந்துகளை கூட வாங்காத திமுக அரசு, விமான நிலையம் அமைப்பதாக கூறுவது நகைச்சுவை என கிண்டலாக தெரிவித்தார்.

News June 28, 2024

எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படை

image

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வேண்டி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது மனுவை நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.

News June 28, 2024

சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும்

image

சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும் என காங்., எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் கோரிக்கையால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சேலத்தில் உள்ள விமான நிலையம் 6 மாதங்கள் தான் இயங்கும். மீதமுள்ள 6 மாதங்கள் மூடிவிடுவாா்கள். இதற்குக் காரணம் பயணிகள் வருகை இல்லாததுதான். எனவே, பயனுள்ள விமான நிலையமாக மாற்ற, அதை கொஞ்சம் நகா்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News June 28, 2024

திருட்டு வழக்கில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத்குமார் மற்றும் இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ரவுடி வினோத்குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இம்ரான்கான் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், 2  இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

News June 28, 2024

2023-24 ஆண்டில் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு

image

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டில் விவசாயம், தொழில் கடன் என பல பிரிவுகளில் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

News June 28, 2024

நிறைவேற்றப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – கலெக்டர்

image

ஆனைமலை வட்டாரத்துக்கான வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் தொடா்பான ஆய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அவர் கோவை மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

News June 28, 2024

செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், செங்கல்பட்டில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஜூலை 2ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் கேட்டுக்கொண்டார்.

News June 28, 2024

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!