Tamilnadu

News April 24, 2024

மயிலாடுதுறை அருகே வெடி விபத்து- 6 பேரின் நிலை?

image

சீர்காழி அருகே தாண்டவன்குளம் கன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு வான வேடிக்கை நடைபெற்றது. அப்போது வெடி விபத்து ஏற்பட்டு பக்தர்கள் கூட்டத்தில் வெடித்து சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

BREAKING நெல்லை: பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்‌.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 24, 2024

புதுவை படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம்

image

புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.

News April 24, 2024

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய மலை ஏறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்ற இளைஞர் மலை ஏறி விட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

News April 24, 2024

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா

image

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல்.23) ஆஜரானார்.  வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, யாஷிகா ஆனந்தை வரும் மே 3 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.

News April 24, 2024

தேனியில் தொடரும் கண்காணிப்பு !

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.அதன்படி தேனி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

திருவாரூர் மாவட்ட அளவிளான ஆணழகன் போட்டி.

image

திருவாரூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் வடுவூர் சோழன் உடற்பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மன்னார்குடி -தஞ்சாவூர் சாலையில் உள்ள வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட அமைச்சூர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

3ஆம் இடத்தை பிடித்த ஈரோடு

image

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.அதன்படி நேற்றைய வெயில் நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.அதில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

News April 24, 2024

தண்ணீர் வேண்டி பெண்கள் போராட்டம்

image

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியில் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என காலி குடங்களுடன் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு இன்று (ஏப்.22) போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 28-ம் தேதி நிறைவு

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!