India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி மகளிர் அரசு கல்லூரியில் நிகழ் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று வணிகவியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 1,230 இடங்களுக்கு 12,853 மாணவிகள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுற்ற நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். இன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாவட்ட குழுவின் முயற்சியால், மத்திய அரசின் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. தற்போது ரயில்வே துறை பணித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கேரளம், ஆந்திராவைப் போல், தமிழ்நாட்டிலும் கள் இறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. எனவே, அரசின் விளக்கத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வர முடியாது” என்று கூறி வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
கூடலூர் தொரப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, டிஎப்ஓ வெங்கடேஷ்பிரபு மேற்பார்வையில், நேற்று (ஜூன் 25) காட்டு யானைகளை, கும்கி யானை உதவியுடன் 20 வன ஊழியர்கள் விரட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இன்று புதன்கிழமை போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை அந்த வளைதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், 600-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் பால்குளத்தை சேர்ந்தவர் பிரஜாபதி. இவர் கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர், கனிமொழி எம்பி ஆகியோர் மீது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பினார்.இது சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (ஜூன் 25) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 10 மணிக்கு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பயிற்சியினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.