India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 28ஆம் தேதி 265 பேருந்துகளும், ஜூன் 29ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (ஜூன் 27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் 25% மானியத்துடன் ரூ.75 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.யோகஜோதி உள்ளார். இதில் பருவமழையை எதிர்கொள்ள தாயர் குறித்து கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. ரிசர்வ் வங்கி பல்வேறு விளக்கங்கள் அளித்தும் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஜெய்சங்கர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நாளை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஜூலை 8ம்தேதி முதல் 28ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். அக்டோபர் 18ம் தேதி முதல் இத்தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் 04172- 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில், “மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 வட்டங்களில், ஆறு வட்டங்களுக்கான நத்தம் ஆவணங்கள் இணையவழி படுத்தப்பட்டுள்ளது. எனவே, நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இ சேவை மையம் மற்றும் Citizen portal வாயிலாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுய உதவிக் குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வருகிற 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.