India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை பிரிவு சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சீவலப்பேரி ரோடு நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1770. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் – 74017035 06 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம்.
எடப்பாடியில் தேவகிரி அம்பாள், நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி கலந்து கொண்டு
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி வட்டாரத்தில் முகாமிட்டு அனுபவப் பயிற்சி பெற்று வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள், வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு, கருத்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் சந்திரசேகர், ஆத்மா துணை மேலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூச்சந்தை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் தஞ்சை பூச்சந்தையில் உள்ள பழக்கடைக்காரர் ஹாஜாமொய்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் சட்டசபை தொகுதி வாரியாக அறைகளில் மூடி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் காவலுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜூன் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்கு என்னும் மையத்தை இன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகர காவல்துறை இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் டிராபிக் வார்டன் அமைப்பில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம், டிராபிக் வார்டன் அலுவலகத்தில் 27, 28ம் தேதிகளில் இலவசமாக பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14, 46, 352 வாக்காளர்கள் உள்ள நிலையில் 11,19, 881 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 77.43% சதவீதம் வாக்குப்பதிவு பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் 6 வது இடத்தை பெரம்பலூர் மக்களவை தொகுதி பெற்றுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் விரைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள நடவாய் கிணறு ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் நடவாய் கிணறை காண ஏராளமான பொதுமக்கள் குவித்து வருகின்றனர். இக்கிணற்றில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சென்று காணமுடியும் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டு களித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.