India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கென்னடி குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன் (79). இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் இன்று விண்ணமங்கலம் அருகே தண்ணீர் எடுக்க தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது போடிநாயக்கனூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர்.
அணைக்கட்டு அடுத்த அத்தியூர் முதல் கொல்லைமேடு வரை 1.04 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 1.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் அமைந்துள்ள சிறுபாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (21.06.2024) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசி, கார்த்திகேயன் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவமனைகளில் ஸ்பிரிட் என்ற ஆல்கஹால் பானத்தை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மருத்துவமனை மூடப்படும். மேலும், ஸ்பிரிட் இருப்பு விபரங்களை அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஒதுக்கப்பட்ட அட்டவணை சாதியினர் துணைத் திட்ட நிதி SCSP/TSP ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டு பணிகளுக்காக 23-24 நிதியாண்டிற்கு மக்களின் வளர்ச்சிக்கு 100 விழுக்காடு செலவு செய்யப்பட்டதா? 100 விழுக்காடு செலவு செய்து இருந்தால் அது தொடர்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று தெரிவித்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 21)நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் மேலும் தீவிர சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தினார். உடன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் இருந்தனர்.
மதுரை அழகர் கோயிலில், இந்தாண்டுக்கான கடைகள் ஏலம், கோயில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.
இதில் பூக்கடை, பஸ்நிலைய உணவு விடுதி மற்றும் பஸ் நிலைய தேநீர் கடை உள்ளிட்ட 34 வகையான கடைகள் ரூ.1 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹஸ்வந்த் (20) என்ற மாணவர் தனது மேல் படிப்புக்காக மும்பை செல்ல உள்ளார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் அருண்ராஜ் ரூ.35 ஆயிரம் காசோலையை மாணவனிடம் வழங்கினார். காசோலை பெற்றுக்கொண்ட மாணவன் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம் வடக்கு மல்லல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணி புரிந்த போது திடீரென உயிரிழந்துள்ளார். அவரின் உடலை ராமநாதபுரம் கொண்டுவர மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரனிடம் மனைவி ஜெயராணி கோரிக்கை மனு அளித்தார். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது மனைவி ஜெயராணி கதறி அழுது, துக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு. இன்று (ஜூன்.21)காலை கட்சியின் அலுவலகம் எதிரே எஸ்டிபி கட்சியின் கொடியேற்று விழா கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.