Tamilnadu

News April 25, 2024

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் கடும் கண்டனம்

image

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக தலைமையிலான தமிழக அரசு தற்போது கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, புகையிலை கடத்தல், ரேசன் அரிசி கடத்தல் ஆகியவற்றை தடுக்க தவறி விட்டது. இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News April 25, 2024

சென்னை: ரயில் நிலையத்தில் குறைந்த விலையில் உணவு

image

ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் 5 நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது. 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 25, 2024

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சிறப்பு

image

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசுவாமி கோவில். 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில், கொடை அளித்தவர்கள் பற்றிய விவரம் சிதைந்து காணப்படுகிறது. தாரகாசுரன் என்ற அரக்கனை முருகன் இங்கு வதம் செய்ததாக கூறப்படுகிறது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள், ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனப் போற்றப்படுகிறது.

News April 25, 2024

லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்

image

கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து நாளை மறுநாள் (ஏப்.,26) கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நாமக்கல்: போதிய தண்ணீர் அருந்துங்கள் ஆட்சியர் தகவல்

image

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 24.4.24 ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும்,தேவையின்றி மதியம் 12-3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமாயின் மருத்துவரை அணுகுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

3வது இடம் பிடித்த சேலம்!

image

இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான இடங்களில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் நேற்று(ஏப்.23) அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடை காலம் ஆரம்பித்து வெயில் கொளுத்தும் நிலையில் ஆங்காங்கே வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி நாட்டிலேயே வெப்பநிலையில் ஈரோடு 3வது இடம்(நேற்று முன்தின நிலவரப்படி) பிடித்திருந்த நிலையில், சேலம் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.

News April 25, 2024

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!

image

வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கி வருகிறது. இந்த நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்க கால்நடை பராமரிப்ப துறையால் வரும் ஏப்.,29 முதல் மாவட்டதில் உள்ள 2.70 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆடு வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!