India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்கள் ஜெகன்(30), பாக்யராஜ்(39). இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.23) பைக்கில் தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, வேம்பக்குடி அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோயம்புத்தூரில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது ஆழியார் அணை. வேளாண்மை மற்றும் பாசன வசதிக்காக 1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே இவ்வணை கட்டப்பட்டது. 81 மீட்டர் உயரம் கொண்ட ஆழியார் அணைக்கட்டின் கீழ் படகுசவாரியும் பூங்காவும் உள்ளது. ஆனைமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளை உள்ளடக்கி, 37 கி.மீ வரை பாய்ந்து கேரளாவின் பாரதபுழா ஆற்றில் கலக்கிறது.
செங்குன்றம், ஜி.எல்.பி புறவழிச்சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய செங்குன்றம் போலீசார் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லையான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் ஊரக வளர்ச்சித் துறையினர் முகாமிட்டு அங்கிருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்கின்றனர். இன்று (ஏப்ரல் 24) வாகனங்களில் கிருமி நாசினி செலுத்தி பின்னர் அனுமதிக்கப்பட்டது.
ரயிலில் 2ம் வகுப்பு பொது பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுகாதாரமான சுவையான உணவு வழங்க ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் ரயில் நிலையங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் நேற்று முதல் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த உணவகங்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக உள்ளது. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை முதல் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ நீண்டுள்ளது. 1880-களில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் சென்னை மெரீனா கடற்கரை புதுப்பிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய அடையாளமாக மெரீனா விளங்குகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இன்று(24.04.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கூடலூர், அவினாசி, பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குன்னூரில் 1,25,778 பேர், உதகையில் 1,31,789 பேர், கூடலூரில் 1,28,934 பேர், மேட்டுப்பாளையத்தில் 2, 20710 பேர், அவிநாசியில் 2,20710 பேர் பவானிசாகரில் 1,97, 880 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தமாக தொகுதி முழுவதும் 70.95% வாக்குப்பதிவாகியுள்ளது
சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.24) தோகாவில் இருந்து வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒருவரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.