India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியார் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததாக சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநர் பேரவை தலைவருக்கு இன்று பதில் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.
திருவெறும்பூர் அருகே காட்டூர் அண்ணா நகர் குருவி மண்டபம் பகுதியில் போதை மாத்திரை இருப்பதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர், ரியாஸ்கான் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது அரியமங்கலத்தை சேர்ந்த நஸ்ருதீன் போதை மாத்திரைகளை விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 26,250 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நஸ்ருதீனை கைது செய்தனர்.
புதுக்கோட்டை நகரில் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சி சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் ஜெய ரவிவர்மா விஏஓவாக இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.
ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிர்வாகம் சார்பில் பணிபுரிந்து வந்த 5 ஊழியர்களை பணி மாற்றம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 தொழிலாளர்கள் திடீரென்று தொழிற்சாலை முன்பு 5 பணியாளர்கள் தனது சங்கத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த முதுநகர் போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்த வெள்ளி கடற்கரை இருப்பினும், இதனால் நகரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஆசியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றாக வெள்ளி கடற்கரை விளங்குகிறது. கடற்கரைக்கு தெற்கில், தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கும். இக்கடற்கரையில் நூற்றாண்டுக்கும் பழமையான கலங்கரைவிளக்கம் உள்ளது. மேலும் பழமையான செயின்ட் டேவிட் கோட்டை கடற்கரைக்கு அருகில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதத்தில் வாகன சோதனை நடத்தியதில் செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வந்த 115 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்பு ஏற்படுத்திய 76 பேர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விழாவில் பங்கேற்ற 4 பெண் பக்தர்களிடம் இருந்து 9 சவரன் நகைகளை திருடிய திருச்சியை சேர்ந்த சுதா, மீனா, ரஞ்சிதா மற்றும் நாகையை சேர்ந்த லட்சுமி, தேவி உள்ளிட்ட 5 பெண்களை மதுரை மதிச்சியம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூலூர் அடுத்துள்ள கலங்கல் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருபவர் செல்வராஜ். இவர் அவரது மில்லின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் நேற்று செல்வராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.