India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பெருமாள் கோவில் பதி பகுதியில் உள்ள ஆற்று படுகையில் இன்று (ஏப்.24) குளிக்க சென்ற பிரவீன் (17). கவின் (16), தர்ஷன் (17) ஆகிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 3 பேர் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி வார்டு எண் 21 சத்துவாச்சாரி பகுதி 3 பூங்கா நகர், அப்துல்கலாம் தெரு, அதியமான் தெரு ஆகிய தெருக்களில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. உடன் மாமன்ற உறுப்பினர் சக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் சிவகுமார் இருந்தனர்.
தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், இந்தியாவின், 100 இடங்களில், ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு வழங்கும் ‘உணவு வீதிகள்’ திட்டத்தை மத்திய அரசு, உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைய குழு மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உணவு வீதி அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஜூன் 4க்கு பிறகு, கோவை மக்கள் இங்கு சுவையான உணவு வகைகளை அருந்தலாம் என்று தகவல் இன்று வெளியாகி உள்ளது.
திருநெல்வேலியில் தற்பொழுது வெயில் வெளுத்து வாங்குவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகின்றது. இதனால் இறவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நீர் இருப்பை பொறுத்து சாகுபடி செய்யும் பயிர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் நகர், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு,
வேர்கோடு, புதுரோடு, செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு தங்கச்சிமடம் ஆகிய இடங்களில்
மின் பாதை பராமரிப்பு பணிக்காக நாளை ( ஏப்.,25) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தடை ரத்து செய்யப்படுவதாக
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி இன்று (ஏப்.24) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தமிழக டிஜிபியால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அனுமதி மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் ரத்து செய்ய கோரிய வழக்கின் விசாரணையில் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், வேலவன் நகர், காட்டூர், காட்டுக் கொட்டாய் பகுதியில் தேர்தல் பணியின் போது இறந்த ஜெயபாலன் வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையினை வழங்கினார். அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
புயல், கடல் சீற்றம் போன்ற வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கை தகவல்களை ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி சிம்கார்டு ரீசார்ஜ் வசதியை அரசு நிறுத்தி உள்ளதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் எங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக வள்ளவிளை மீனவர்கள் இன்று ஏப்-24 ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி விழுப்புரம் அண்ணாமலை பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றாமல் அரசு பேருந்து சென்றது குறித்து ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியானது. இதையடுத்து, பெண் பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த ஊழியரான நத்துனர் தேவராசு அவர்களை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மண்டல பொது மேளாலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.