India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேடசந்தூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜீவா.இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாடிக்கொம்புவை சேர்ந்த ஒருவருக்கும் மாரம்பாடியில் இறைச்சிக்கடை அமைப்பதில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் ஜீவாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.இதில் படுகாயம் அடைந்த ஜீவா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வேடசந்தூர் போலீசார் விசாரணை
மருதம்புத்தூரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சமூக வளைதளம் மூலம் அப்பெண்ணுடன் பழகிய சிலர் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டதாக அவமானமடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக குறும்பலாப்பேரி கண்ணன், மருதம்புத்தூர் முத்துராஜா, முருகேசன் ஆகியோரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
குமரி, கோடிமுனை பகுதி கப்பல் கேப்டன் கிளீட்டஸ் (50) கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்.20ம் தேதி நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதி லாட்ஜில் தங்கி இருந்தவர் நேற்று (அக். 21) அங்கு இறந்த நிலையில் காணப்பட்டார். கோட்டார் போலீசார் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் உடல் நலக்குறைவால் கிளீட்டஸ் இறந்தது தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்க உதவும் உதவி எண்கள் மாவட்ட காவல் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் இன்று (22.10.2025) வெளியிட்டுள்ளன. அவசர காலங்களில் மக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம், தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். மேலே உள்ள படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பப்படிவத்தை பெற்று நவம்பர் 30-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பேரிடர் காலங்களில் அல்லது பேரிடர் இயற்கை இடர்பாடுகளில், 24 மணி நேரமும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077, அல்லது 04343-234444 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் அக்.21 நள்ளிரவு முதல் நேற்று (அக்.22) முற்பகல் வரை தூறலும், பலத்த மழையும் மாறிமாறி பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்.23) மழை பதிவு நிலவரம்; அரூர் 113 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 58 மில்லி மீட்டர், மொரப்பூர் 33 மில்லி மீட்டர், பென்னாகரம் 29 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 24 மில்லி மீட்டர், தருமபுரி 23.1 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 14 மில்லி மீட்டர், பாலக்கோடு 12 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 12 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும். மேலும் விபரங்களுக்கு இங்கே <
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலுார் நோக்கி, அரசு பேருந்து புலிப்பாக்கம் சந்திப்பு அருகில் சென்ற போது, பின்னால் சென்னை- படாளம் நோக்கி வந்த தனியார் மருத்துவக் கல்லுாரி பேருந்து, அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னை- நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதனால் யணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.