India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூர் அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் ஒரு தீர்த்தக்குடம் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இதில் தீர்த்தக்குடம் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மேலும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தீர்த்த தண்ணீரில் விளக்கு எரிய வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை, கீழ்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது நாகநாதர் கோவில். தமிழகத்தில் உள்ள நவகிரக கோவில்களில் கேதுவிற்கான ஸ்தலம் இதுவே. மூலவராக நாகநாதரிற்கு இடப்புறத்தில் கேது சன்னதி உள்ளது. இக்கோவிலில் வானவியல் சாஸ்திரத்தின் படி, கேது தோசம், நாக தோசம் உள்ளோர் இங்கு வழிபட்டு தோச நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்துவதாக திருத்தணி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று திருத்தணி ரயில் நிலைய பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஓம்பிரகாஷ் மற்றும் வாசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம் வட்டம் மேலமாத்தூர் அருகே வரிசைபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ கல்வி குழுமத்தின் புதிய அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(ஏப்ரல் 24) மாலை பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் கல்விக் குழுமத்தில் நிர்வாக தலைவராக ராஜாராமன் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலராக ராம்பிரசாத் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் நிர்வாக அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு சிவனை விட மீனாட்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 274ஆவது தேவாரப்பாடல் பெற்ற இத்தலம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். 15 ஏக்கர் பரப்பளவில் 8 கோபுரங்களும் 2 விமானங்களும், கலைநயத்துடன் கூடிய பல மண்டபங்கள், இசைத்தூண்களையும் கொண்டு காட்சியளிக்கிறது. ஒவ்வொரு கோபுரமும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.
செக்கானூரணியிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
ஆலம்பட்டி பாரதியார் நகரில் பேருந்து சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள தனியார் கிளப்புடன் கூடிய பார் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் காலி பீர் பாட்டிலை பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் மீது வீசினார். இதில் பயணி அமுதவல்லி என்ற பெண் காயமடைந்தார். அடாவடி செய்த மர்மநபரை போலீசார் தேடுகின்றனர்.
‘குறுகியகால பயிர்களை ஊக்குவிக்க ஏப்ரல், மே, ஜூனில் நிலக்கடலை 30 எக்டேரிலும் , உளுந்து 15 எக்டேரிலும் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவசாயிகள் தேர்வு திருப்பரங்குன்றம் பகுதியில் நடக்கிறது. தேர்வாகும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் கோடையிலும் விவசாயிகள் வருமானம் ஈட்டலாம் என வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் கதிரியக்கத் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார். இவர் கண்டுபிடித்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் ‘புளோரசன்ஸ் மாா்க்கருக்கு ‘ மத்திய அரசு காப்புரிமை வழங்கியது. இதற்காக நேற்று செந்தில்குமாரை, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் அருகே கூட்டுப் புலி என்ற இடத்தில் கோழி லோடு ஏற்றச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழங்கியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) கட்டிட தொழிலாளி ஆன இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.