India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களம் இறங்கியவர் கார்த்தியாயினி. தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தும் வந்தார். தபால் வாக்கு எண்ணத்தொடங்கியதில் இருந்தே பின்னடைவை சந்தித்து வருகிறார். பாஜகவின் முகமாக திகழ்ந்த இவர் 77,374 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,44,802, தேமுதிக -2,64,309, பாமக -1,99,735.1,80,493 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் மட்டுமே தற்போது வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிந்துள்ளது. எனவே தூத்துக்குடி தொகுதியில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார் என தகவல் தெரிந்ததும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார்.அதே போல் பாமக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்து கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 14ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 3,48,558 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2,71,945 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,11,522 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 11 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,60,153 வாக்குகளும், அதிமுக – 1,54,846 வாக்குகளும், பாமக – 1,26,953 வாக்குகளும், நாதக- 35,458 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 1,05,307 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான 9,67,031 வாக்குகள் எண்ணப்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வாக்கு இயந்திரம் பழுது காரணமாக 1524 ஓட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது. நாகை சட்டமன்ற தொகுதியில் 38,39 நம்பர் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை முடிவு பெறாமல் உள்ளது.
4 மணி நிலவரப்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,04,695 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,94,736 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 60,496 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26,921 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி 14ஆவது சுற்றில்
26,615 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 11,000 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 11,974 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2868 வாக்குகள் பெற்றுள்ளார்.
14-வது சுற்று முடிவில் திமுக 160037 முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 694 வாக்குகள் பதிவானது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 14 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,21,716, அதிமுக – 2,62,412, பாமக – 1,20,295, நாம் தமிழர் – 40,174 வாக்குகள் பெற்றுள்ளனர். விசிக வேட்பாளர் ரவிக்குமார் 59304 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.