India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்ன மையத்தில் இன்று எண்ணிக்கை தொடங்கியது. இதில் குடியாத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியது.
தருமபுரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர் முன்னணியில் உள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது சட்டசபை தொகுதி வாரியாக ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முன்னணி நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும்.
நெல்லை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். 2ஆம் இடத்தில் திமுக உள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 2ஆம் சுற்று இன்னும் சில நேரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை வாக்கு என்னும் மையத்தில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மின்விசிறி,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முகவர்கள் கடுமையாக கூச்சலிட்டு வருகின்றனர்.
நெல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார்.
திருச்சி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர் முன்னணியில் உள்ளார். 2ஆம் இடத்தில் நாம் வேட்பாளர் உள்ளார்.
ராமநாதபுரத்தில் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முறையான கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இன்று 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலிருந்து 13 விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் வாக்கு எண்ணிக்கை பொதுபார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா அவர்கள் மேற்பார்வையில் தொடைங்கியது.
வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல், குழுப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பத்தால் தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.