India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டதில் 3வது சுற்று, முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் மலையரசன் 72,365 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் குமரகுரு 65, 545 வாக்குகளும் பெற்றுள்ளன. மூன்றாவது சுற்றில் 6820 வாக்குகள் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வைத்து என்னப்பட்டு வருகின்றது. முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 2665 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 41,187 வாக்குகளுடன் ஏறுமுகத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 23,888, அதிமுக 16,190, நாம் தமிழர் 2,670 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம், 30,726 வாக்குகள் பெற்று 18,962 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகம்மது முபாரக், 11,764
பா.ம.க வேட்பாளர் திலகபாமா -5,414, நா.த.க வேட்பாளர் கயிலை ராஜன் 4,353வாக்குகள் பெற்றுள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் சுற்று முடிவுகளின் படி,
கம்யூனிஸ்ட் சுப்பராயன்: 21,526
அதிமுக அருணாசலம்: 17,479
பாஜக முருகானந்தம்: 6,789
நாதக சீதாலட்சுமி; 3819
இந்தியா கூட்டணி வேட்பாளர் 3957 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. முதல் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி முன்னிலையில் வகிக்கிறது.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் அதிமுக- 24,018 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் திமுக-22,929, மூன்றாவது இடத்தில் பாஜக-5,032 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியானது ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தென்காசி திமுக வேட்பாளரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் காலையிலிருந்து முன்னிலையில் இருந்து வருகிறார். தற்போது 20 ஆயிரத்து 108 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இருந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலியில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் படி 8220 வாக்குகள் பெற்று இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 39,000 வாக்குகளும்(சுற்று 3), தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 54,000 வாக்குகளும்(சுற்று – 4), மத்திய சென்னை வேட்பாளர் 24,000 வாக்குகளும்(சுற்று 1) பெற்று முன்னிலையில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை, இரண்டாவது இடத்தில் புதிய தமிழகம் உள்ளது. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் காட்சியும், நான்காவது இடத்தில் பாஜக உள்ளன.
Sorry, no posts matched your criteria.