India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் தற்போது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னணியில் உள்ளார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு என்னும் படி அரசு பொறியியல் கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3817 வாக்குகள். அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 522, பாரதிய ஜனதா வேட்பாளர் நயனார் நாகேந்திரன் 2157, நாம் தமிழர் 774 வாக்குகள் பெற்றுள்ளன.
திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் கடந்த சில நிமிடங்கள் முன்பு 5000-த்தை தாண்டிய நிலையில் தற்பொழுது நிலையில் 9- ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில் தபால் வாக்குகளில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து முதல் சுற்று வாக்குகள் எண்ணும் பணியில் சுமார் 8400 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் திமுக 5343 வாக்குகள், நாம் தமிழர் 1423, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 1388 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது 2-வது சுற்று வாக்குகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளனர்.
மதுரை தொகுதியில் தபால் வாக்கு மற்றும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சிபிஎம் வெங்கடேசன் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோன்று திருப்பூர், நாகை தொகுதியில் சிபிஎம் கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சு. வெங்கடேசன் முன்னிலை வகித்து வருகிறார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ராதிகா சரத்குமார் பின்னடைவில் உள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 முதல் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பாலவாடி வாக்குச்சாவடி எண்ணிக்கை முதல் சுற்றில்
அதிமுக 259, திமுக 302, பாமக 363 வாக்குகள் பெற்றுள்ளனன . இதில் பாமக செளமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது காங்.வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னணியில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.