India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் அசாதாரணமான பணிகளை ஆற்றியவர்களுக்கு 2025- ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பத்தை நிறைவு செய்து, அதன் நகலை 28.6.2024 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க. தர்பகராஜ் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் 192 கண்காணிப்பு கேமராக்களுடன் மத்திய துணை ராணுவம் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,(ஜூன்4) நாளை கூடுதலாக 1125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு என்னும் மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜா அரசு கல்லூரியில் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான பணியாளர்கள் குழுக்கள் முறையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன் மாதவரத்தில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து, 18குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கத்தில் தாய்ப்பால் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2024-2025ம் கல்வியாண்டில் பொது பிரிவினருக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையில் ஜூன் 10ம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், மனையியல் ஆகியவை கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சுடர்க்கொடி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகநோட்டக்காரன் பட்டி பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கார்ணாம்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம்(41), மணப்பாறையை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 111.430 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஜீவன் ரக் ஷா விருது என்பது துணிச்சலுடன், தாமதம் இன்றி உயிரை காப்பாற்றியதற்காக வழங்கப்படும் விருதாகும். 2024 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 28 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளை ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை காண முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக பதவியில் இருந்து வந்த ஆவடி நாசர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கினார்.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க தேர்தல் ஆணையம் அர்ச்சனதாஸ் பட்நாயக் என்ற பார்வையாளரை நியமித்துள்ளது. இதுபோல் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க பொது பார்வையாளராக டோபேஸ் வர்மா பொது பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.