India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி சவேரியார் புரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று சோரீஸ்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அண்ணா நகரை சேர்ந்த பொன்ராஜ் (24) என்ற வாலிபர் அவரை வழிமறித்து பணம் கேட்டு அறிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் பொன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் (70.59%) வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் எண்ணும் பணி சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (ஜூன்.2) முதல் 30 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சித் துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிப் பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர்கள் 9 நபர்களுக்கான பணி நியமன ஆணையை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப் மற்றும் துறை அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரடியாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வாணியம்பாடி, அம்பலூர் பகுதியைச் சேர்ந்த கலைக்குடில் பரதநாட்டியம் பயிற்சி குழு சார்பில் உலக சாதனைக்காக 800 மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு இன்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் வழங்கினார். இதில் கலைக்குடில் பரதநாட்டிய பயிற்சியாளர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பித்தளைப்பட்டியை சேர்ந்த பித்தளை என்ற செந்தில் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு எண்ணும் பகுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு DBC ஊழியர்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி சட்டப்படியான சம்பளம் வழங்க கோரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் வேலை பார்த்த நாட்களுக்கு மாநகராட்சி சம்பளம் வழங்காததை கண்டித்து சம்பளத்தை உடனே வழங்க கோரியும்
இன்று (ஜூன் 3) மாலை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண் சம்பத்குமார் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேர்மன் கருணா, இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.