India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் சேட்டு (42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை பெண்ணின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று சேட்டு இறந்தார். மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலூர், கோழியூரை சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் நேற்று சொந்த ஊர் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்ற போது, கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, ஒரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் வந்த 3 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், அருணகிரிமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த நம்மந்தங்குட்டை கிராமத்தில் வசிப்பவா் ரஞ்சினி பூமிநாதன். விவசாயியான இவா் தனது நிலத்தில் பசு மாட்டை கட்டி வைத்திருந்தாா்.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதில், நிலத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, கிழக்கு கடற்கரை சாலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று திடீரென தீ பற்றியது. இதனால் புதரில் வெயிலில் காய்ந்திருந்த செடிகள் மீது தீப்பிடித்து அருகில் உள்ள பனை மரங்கள் மீது தீ பரவியது. இதில் 150 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. கல்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தில் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக வீடுகளில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதத்தைச் சந்தித்தன.
நாங்குநேரி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாங்குநேரி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்ந்தது. அதன்படி ஒரு வழி பயணத்திற்கு கார், ஜீப் கட்டணம் ரூ.110, மினி பஸ், வேன் ரூ.180, பேருந்து ரூ.375, மூன்று அச்சு வாகனங்கள் ரூ.410, நான்கு அச்சு வாகனங்கள் ரூ.590, ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.715 என உயர்ந்தது.
திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிரிட்டு பதிவு செய்யாத விவசாயிகளை தொடர்புகொண்டு கரும்பு ஆலையின் அலுவலர் பதிவு செய்துவருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு இதுவரை பதிவுசெய்யாத விவசாயிகள் பதிவு செய்யலாம் என நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். விவரங்கள் பெற 9943966322 என்ற எண்ணை தொடர்புகொள்க.
கூடலூர் கோக்கால் பகுதியில் நேற்று தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் உலா வருவதை அப்பகுதியினர் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் வனத்துறையினர் அங்கு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்து பாறை அருகே காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறையினர் முன்னிலையில் அதன் உடலை முதுமலை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மொத்தம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை போலீசார், வெப்பாலம்பட்டி அருகே பெட்டி கடையில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஒரு பெட்டி கடையில் மது விற்பனை செய்த லட்சுமி (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.