Tamilnadu

News June 3, 2024

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

News June 3, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு எண்ணும் பகுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உள்ளார்.

News June 3, 2024

டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் முக்கிய முடிவு

image

நெல்லை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு DBC ஊழியர்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி சட்டப்படியான சம்பளம் வழங்க கோரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் வேலை பார்த்த நாட்களுக்கு மாநகராட்சி சம்பளம் வழங்காததை கண்டித்து சம்பளத்தை உடனே வழங்க கோரியும்
இன்று (ஜூன் 3) மாலை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

News June 3, 2024

திருக்கோவிலில் அறுசுவை அன்னதானம்

image

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண் சம்பத்குமார் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேர்மன் கருணா, இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News June 3, 2024

பத்ம விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் அசாதாரணமான பணிகளை ஆற்றியவர்களுக்கு 2025- ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பத்தை நிறைவு செய்து, அதன் நகலை 28.6.2024 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க. தர்பகராஜ் தெரிவித்துள்ளார்

News June 3, 2024

வாக்கு என்னும் மையத்தில் 1125 காவலர்கள்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் 192 கண்காணிப்பு கேமராக்களுடன் மத்திய துணை ராணுவம் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,(ஜூன்4) நாளை கூடுதலாக 1125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு என்னும் மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

இரண்டாம் கட்டமாக பணியாளர்கள் தேர்வு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜா அரசு கல்லூரியில் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான பணியாளர்கள் குழுக்கள் முறையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 3, 2024

தாய்ப்பால் விற்பனை தொடர்பாக சோதனை

image

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன் மாதவரத்தில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து, 18குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கத்தில் தாய்ப்பால் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

News June 3, 2024

சிவகங்கை: அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கலந்தாய்வு

image

சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2024-2025ம் கல்வியாண்டில் பொது பிரிவினருக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையில் ஜூன் 10ம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், மனையியல் ஆகியவை கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சுடர்க்கொடி கண்ணன் தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

குளித்தலை: புகையிலை விற்ற 2 பேர் கைது!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகநோட்டக்காரன் பட்டி பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கார்ணாம்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம்(41), மணப்பாறையை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 111.430 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!