India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதி சேர்ந்த கார்த்திக் (24), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கீரனூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திகை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை காவல் சரகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று(ஜன.11) சட்டவிரோத குட்கா பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரை சேர்ந்த ராகுல் ஹமீது (51) என்பவர், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து. மேலும் அவரை கைது செய்து, சுமார் 7 கி குட்கா பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி குருவார்பட்டி பழனி (விவசாயி) கொட்டாம்பட்டியில் இருந்து குருவார்பட்டிக்கு பைக்கில் சென்றார். வலைச்சேரி பட்டி பிரிவில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிபட்டு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(25). இவர், கோவர்தன் நகர் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஆனந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 16 வயது +2 மாணவி, நேற்று(ஜன.11) காலை டியூசனுக்கு சென்ற போது, கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன்(19) என்பவர் பின் தொடர்ந்து, மாணவியின் செல்போனைக் கேட்டு தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், அவரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க வேண்டி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், ராணிப்பேட்டை ஊராட்சிகளில் குடிநீர், மின் விளக்கு, பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் பாதிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஊராட்சி அலுவலங்கள் தொடர்ச்சியாக கிடப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனி பின்னத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (28). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் தீராத வலியில் இருந்து வந்த அஜித்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

நெல்லை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் <

ராமநாதபுரம் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள்<
Sorry, no posts matched your criteria.