Tamilnadu

News June 3, 2024

மது விற்ற சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

image

காசிமேடு சிக்னல் அருகே கூடுதல் ஆணையரின் தனிப்படையை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கார்த்திக், குமாரவேலு (ம) 2 சிறுவர்கள் சட்டவிரோதமாக மது விற்பதை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறை அடைத்தனர். மேலும், 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.

News June 3, 2024

திருவள்ளூர்: குளிர்சாதன வசதி ஏற்படுத்த கோரிக்கை

image

திருத்தணி மலைமீது முருகன் கோயில் உள்ளது. விநாயகர், சண்முகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய உற்சவ முருகர், மூலவர் முருகர் தனி தனி சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் முருகன் சன்னதியில் மட்டும் குளிர்சாதன வசதி உள்ளது. மற்ற சன்னதிகளில் பக்தர்கள் அதிகமாக வரும்போது கோடை வெயிலில் பக்தர்களுக்கு புழுக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மற்ற சன்னதிகளுக்கும் குளிர்சாதனம் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

News June 3, 2024

கடலூர்:முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்

image

கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் மனோஜ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதியோர் இல்ல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

ஈரோடு: ரூ.4.63 லட்சம் நகை மீட்பு

image

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் நகர பகுதியில் சுமார் ரூ.4,63,000 மதிப்புள்ள காணாமல் போன தங்க நகையை சிசிடிவி-கேமரா உதவியுடன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த நகர குற்றபிரிவு காவலர்களை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் சான்றிதழ்கள் வழங்கினார்.

News June 3, 2024

செங்கல்பட்டு: மிதமான மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள நகர பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இடி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

News June 3, 2024

ஸ்ரீகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோயிலில் 16 ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்கள் பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில் இருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

News June 3, 2024

நீலகிரி: மத்திய அமைச்சருடன் முகவர் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி தேவாங்கர் கல்யாண மண்டபத்தில், வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் பாஜக முகவர்களுக்கு, விதிமுறை விளக்க ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 3) நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.

News June 3, 2024

ஜெயங்கொண்டம் அருகே விபத்து 

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர்கோயில் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி சாலையை கடக்க முயன்றபோது பூவாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றபோது ஆனந்தி மீது பைக் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 3, 2024

வைகுண்ட பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் காட்சி

image

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்ட பெருமாள் வைகாசி உற்சவம் முன்னிட்டு இரவு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதி உலாவில் உலா வந்தது. இதில் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்து கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.

News June 2, 2024

புத்தாநத்தம் அருகே மது போதை ஆசாமி மர்ம மரணம்

image

புத்தாநத்தம் அடுத்த கட்டாரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி
கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணத்தில் ஜவுளி கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஊருக்கு வந்தவர் வீட்டிற்கு வராமல் மது அருந்திவிட்டு எளமனம் நிழற்குடையில் இருந்தார். இந்நிலையில், இன்று மர்ம இறந்த கிடந்தார். தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!