India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் கொடுக்குற கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்கார யாகசாலை, மூலவர் விக்கிரகங்கள் இயந்திரம் வைத்து அஷ்டபந்தனம் சாத்தி புனித கங்கை, காவிரி நீர், ராமேஸ்வரம் கோட்டி உள்ளிட்ட புனித நீரால் இன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
உதகையில் காலை 11 மணி முதல் பரவலாக பெய்த மழை, மதியம் திடீரென்று இரண்டு மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் உதகையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து எவ்விதப் பணிகளை செய்ய முடியாமல் காவலர்கள் தத்தளித்தனர். உதகை ரயில்வே காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது.
கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 1 ) வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 52.60மி.மீ மழை பதிவானது. மோர்தனா அணை 24 மி.மீ மழையும், குடியாத்தம் 14.60மி.மீ , கே.வி. குப்பம் 20மி.மீ, வேலூரில் 5.70மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 165.55மி.மீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை ஜூன் 2,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தால் ஜுலை13ல் நடத்தப்படவுள்ள குரூப் 1 தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
புழல், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மகன் ஜெரால்டு (12). நேற்று ஜெரால்டு வீட்டுக்கு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து நாய் ஒன்று அவரை துரத்தி கடித்தது. இதில் ஜெரால்டு-விற்கு முகம், காது, மூக்கு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவனை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்தனர். புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே உள்ள சென்னிமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது வீட்டில் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணம் மற்றும் ஐந்து பவுன் நகை திருடி சென்றனர். அதேபோல் மற்றொரு வீட்டில் நச்சால் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை தேடி சென்றனர். இந்த வழக்கில் போலீசார் கள்ளக்குறிச்சி சேர்ந்த ரஷீத் (23) என்ற வாலிபரையும் அவரது தாய் ரவிதா (41) என இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூரில் சிவன் பாண்டி என்பவர் தனது பட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை விரட்டி சென்றதில் 20 ஆடுகள் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. இதுகுறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
நெல்லை, பாளை வட்டாரங்களில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சுமார் 20 தினங்களுக்கு பின்னர் நேற்று (ஜூன் 1) வெப்ப பதிவு 100 டிகிரி தாண்டி 101.3 டிகிரி ஆக பதிவானது. இதனால் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இன்று (ஜூன்) 2 காலை முதல் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஏசி மின்விசிறி பயன்பாடு உயர்ந்து கடந்த 3 தினங்களாக மின் நுகர்வு மீண்டும் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா ,மகாராஷ்டிரா , மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன .மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைவால் விலை அதிகமாக ஏறி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி தனியார் பள்ளி சார்பில் தாளாளர் சின்னசாமி ரேணுகாதேவி முன்னிலையில் இன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவுக்கு மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்து விழா குழுவினரிடம் சான்றிதழ் பெற்றார்.
Sorry, no posts matched your criteria.