India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை: புழல் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த கிளியோபஸ் ஜெரால்டு(12) என்பவரை, இவரது பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த 2 நாய்கள் கடித்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் படி, நாயின் உரிமையாளர் ஜான் பெட்ரிக்ஸ் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொன்னமராவதி அருகே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கேசம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (75). இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி வந்த இவர் சுமை ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள மரத்தின் கீழ் விஷத்தை குடித்து இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சின்னையாவின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு, சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மனைவி பூவரசி (28). இவரது மகன் கவீஷ் என்பவருடன் நேற்று ராஜபுதுக்குடி அருகே தனியார் ஓட்டலில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு டூவிலரில் சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகன் கவீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளா்கள் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், வணிக நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 36 நிறுவனங்களில் இருந்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
மூட்டைகளை எடை போடும் ‘பிளாட்பாா்ம் ‘ தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் கட்டாயம் மறு முத்திரை இட வேண்டும் தொழிலாளா் நலன், ஆணையா் முத்து கூறினார்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பூதலூரில் 1.6 மி.மீ, தஞ்சாவூரில் 5 மி.மீ, பாபநாசத்தில் 1.2 மி.மீ, கும்பகோணத்தில் 20 மி.மீ, வல்லத்தில் 19மி.மீ, அயன்குடியில் 12 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 17 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 0.8 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் குமரன் திருநகரில் இன்று குருசாமி என்பவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஏறியது. வண்டியை நகற்ற முயன்ற போது பாம்பு இருப்பதை அறிந்த குருசாமி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கி உள்ள நிலையில் இன்று காலை வரை எங்கும் மழை பதிவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணை பகுதிகளிலும் காற்று மட்டும் வீசியது. மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து பெரிய மாற்றம் இல்லை. கடனா அணைக்கு 7 கன அடி நீர் மட்டுமே வருகிறது. ராமநதி அணைக்கு 10 கன அடி நீர் வருகிறது. கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து இல்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி பக்தர்கள் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் தங்க ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் தங்கத்தேரில் உலா வந்த மீனாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சர்வதேச அளவில் நாட்டிற்கு நற்பெயரையும்,புகழையும் பெற்றுத் தந்த விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.இதில் விளையாட்டு துறைக்கான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது தொடர்பான விவரங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில், தலா 17 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என மொத்தம் ஒரு சட்டசபை தொகுதிக்கு 51 பணியாளர்கள் வீதம் 102 தேர்தல் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு தயார்.
Sorry, no posts matched your criteria.