India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் நேரு சிலை அருகே உள்ள காய்கறி கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கடையில் காய்கறி பெட்டியை தூக்கும்போது அதிலிருந்து பாம்பு அவரை தீண்டியது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பின் தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மலேசியா சிலம்ப கழகம், இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் சார்பில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
மதுரை மங்கையர்க்கரசி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன், 7 முதல் 9 வயது ஆடவர் பிரிவு தனித்திறமை போட்டியில் கார்த்திகேயன் வெண்கல பதக்கம், ஒற்றை அலங்கார சுற்றுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.
மாணவரை தாசில்தார் மீனாட்சி, கவுன்சிலர் பாமா, ஸ்ரீமாருதி சிலம்பப் பள்ளி பயிற்சியாளர் பாராட்டினர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
ரயில் நிலையத்தில் உள்ள
இருசக்ககர வாகன காப்பகம் ஜூன்-1 முதல் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தி வைத்துள்ளவர்கள் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தங்கள் வண்டியை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று வைகாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை எளிதாக்க ஐஸ்-பிரேக்கிங் பயிற்சி பட்டறை பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு நேற்று (ஜூன் 1ஆம்) தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து செல்வம் தலைமையிலான குழு பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.
கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக அவனி ரீச் 24 கட்டிட கலை சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமில் கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான செயல் விளக்கம் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் மூலம் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், எளம்பலூர் சாலை, நான்கு ரோடு, துறைமங்கலம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெலங்கானா உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜுன்.1) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறந்த நிர்வாகம் மற்றும் நல்லாட்சிக்காக மாநிலங்களின் தோற்றம் எப்படி இருந்தன என்பது குறித்து விவாதித்தார். இதனையடுத்து பாரம்பரிய நாட்டுப்புற கலையான, கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட உணர்வுபூர்வ ஒக்கு டோலு நடனம் நடைபெற்றது. இது பார்வையாளர்களை முற்றிலும் மெய்சிலிர்க்க வைத்தது.
Sorry, no posts matched your criteria.