Tamilnadu

News January 12, 2026

நெல்லை: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

image

நெல்லை: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். SHARE IT

News January 12, 2026

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்!

image

கள்ளக்குறிச்சி: குருநாதபுரத்தில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இன்று வழங்கினர். இந்த நிகழ்வில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பனேற்று பொங்கல் தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.

News January 12, 2026

BREAKING: நாட்றம்பள்ளி அருகே தீ விபத்து!

image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.12) பிற்பகல் 3 மணியளவில் இவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனருக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

News January 12, 2026

BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

image

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2026

திருச்செந்தூரில் லாரி மோதி தலை நசுங்கி உயிரிழப்பு

image

திருச்செந்தூர் மெயின் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே லாரி ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பூ ஏற்றி சென்ற ஏரல் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பிரேம்குமாரின் தலை, லாரி சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 12, 2026

திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் பிரச்சனை, சாலை வசதிவேண்டி என பொதுமக்களிடமிருந்து 216 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 12, 2026

கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள ஊர் கவுண்டர்கள் கலந்து கொண்டனர்.

News January 12, 2026

முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

image

கள்ளக்குறிச்சி: முத்தமிழ் சங்கம் கட்டிடத்தில், முத்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா, கவியரங்கம் திருக்குறள் திருவிழா, கவிஞர் வெண்ணிலாவின் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் முருககுரு வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் ஆறு கதிரவன் கலந்துகொண்டார்.

News January 12, 2026

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா

image

கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தேன்கனிக்-கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News January 12, 2026

தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் பாராட்டு

image

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.

error: Content is protected !!
↑