Tamilnadu

News June 1, 2024

நீலகிரியில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்

image

நீலகிரியில் கடந்த ஆண்டு முழுவதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் விளைநிலங்களை தயார் செய்து, கேரட் உள்ளிட்ட மலை காய்கறியின் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News June 1, 2024

குரூப் 2 தேர்வில் சாதித்த விழுப்புரம் மாணவி

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மே 31) பணி நியமன ஆணை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றிவரும் நாகப்பன் என்பவரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரியால் நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News June 1, 2024

கிருஷ்ணகிரி: இடி, மின்னல் தாக்கி பசு பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் அண்ணா நகர் பகுதியில் நேற்று (மே 31) மாலை 7 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, இடி, மின்னல் தாக்கி விவசாயி சின்னசாமி என்பவரின் 1 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க பசு இறந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பசு இறந்ததால் விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

News June 1, 2024

வேலூர்: குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது. மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (மே 31) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

‘இ-சிகரெட்’ – நெல்லை சித்தா டாக்டர் எச்சரிக்கை

image

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று (மே 31) தொடங்கியது. அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்விழி கூறுகையில், 15 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு புகையிலை குறித்த தெளிவு வர வேண்டும். இ-சிகரெட் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இ-சிகரெட்டால் உடலுக்கு பாதிப்பு குறைவு என்பது போன்ற எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை என்றார்.

News June 1, 2024

நெல்லை: நலவாரிய அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல் நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுவதற்கு கடந்த 15ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்ய தொடங்கப்பட்டது. இதற்கான அனைத்து வசதிகளும் விளக்கங்களும் ஆணையரகத்தின் இணையதளத்தில் https://nrtamils.tn.gov.in ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

News June 1, 2024

குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவு

image

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி டாக்டர். பிரபாகர் ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க சட்ட ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்கவும் உத்தரவிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். குளித்தலை டிஎஸ்பி, தோகைமலை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.

News June 1, 2024

தயார் நிலையில் 1 லட்சம் பேர்…!

image

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் அறிவித்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4-க்கான எழுத்துத் தோ்வு வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 1,07,724 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 393 மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

புதுவை: இளம்பெண் உள்பட 3 பேர் கைது

image

புதுவை சுற்றுலா வந்த சென்னை சேர்ந்த தேவராஜ், சஞ்சய், நித்ய  ஆகிய 3 பேரும் மதுபோதையில் இன்று பாரதி பூங்கா பகுதியில் காரை நிறுத்தி இருந்தனர். அங்கிருந்த பெண் போலிஸ் அர்ச்சனா இங்கு காரே நிறுத்த கூடாது எடுங்கள் என கூறியதற்கு அவர்கள் எடுக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயற்சித்து மிரட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

News June 1, 2024

குரூப் 4 தேர்வை எழுதும் 34352 பேர்

image

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வை 96 மையங்களில் 34352 பேர் எழுதவுள்ளதாக ஆட்சியர் சாரு ஸ்ரீ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மன்னார்குடி நீடாமங்கலம் நன்னிலம் திருத்துறைப்பூண்டி வலங்கைமான் குடவாசல் மற்றும் திருவாரூர் ஆகிய 8 தாலுகா பகுதிகளில் 96 மையங்களில் 124 தேர்வறைகள் தேர்வுக்கு தயார் நிலையில் உள்ளன.

error: Content is protected !!