India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4.6.2024 அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவித சம்பவத்திற்கும் இடமளிக்காத வகையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில் வருகிற 4-ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனி வரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரியாகவும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கில் இருந்து மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் இன்று வார சந்தை நடைபெற்றது. இந்த நிலையில் நகராட்சி அலுவலர்கள் வார சந்தையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதித்து அங்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு , 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.
https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை சுவால்பேட்டை, கணேஷ் நகர் ஜோதி நகர், பழனிபேட்டை, மணியக்கார தெரு, விண்டர்பேட்டை, கண்ணன் நகர் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் ஏசி, மின்விசிறி இயக்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து இப்பகுதியில் மின்தடை ஏற்படுவதால், மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் (ம) பாதாள சாக்கடை குழாய் இணைப்புகளும் (ம) குழாய்களின் பழுது சீரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளை நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தி நகராட்சி பணியாளர்கள் மூலம் பணிகளை செய்து கொள்ள வேண்டும். வெளி ஆட்களை கொண்டு தன்னிச்சையாக செயல்படுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறித்து பணி குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம், சோமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில்
சோமங்கலம் போலீஸார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் ஆகியோர் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 11 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், 2 பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மெட்ரோ பணி காரணமாக பள்ளம் ஏற்பட்டதா? வேறு ஏதேனும் காரணமாக பள்ளம் ஏற்பட்டதா? என விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.