Tamilnadu

News June 1, 2024

கோவையில் இருந்து புறப்படாத விமானம்

image

கோவை -சார்ஜா இடையே ஏர் அரேபியா என்ற விமானம் இயக்க பட்டு வருகிறது. இந்த ஏர் அரேபியா விமானம் 160 பயணிகளுடன் கோவையிலிருந்து இன்று (ஜுன் 01) அதிகாலை 4.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் திடிர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணங்களால் விமானம் புறப்பட வில்லை மேலும் தற்போது வரை இந்த தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் இந்த விமானம் இன்னும் புறப்பட வில்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.

News June 1, 2024

திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சிறப்பு!

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கூந்தங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இதன் பரப்பளவு 1.2933 சகிமீ ஆகும். இப்பகுதி 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் சிறப்பானது.

News June 1, 2024

வெறுப்பு அரசியலை விதைக்கும் பிரதமர்: திருமாவளவன்

image

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா கூட்டணி முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வெறுப்பு அரசியலை விதைக்கும் பிரதமர், விவேகானந்தர் போல் நற்பெயரை பெறமுடியாது. 10 ஆண்டு காலம் இருளில் மூழ்கிய தேசத்திற்கு வெளிச்சம் கிடைக்கப் போகிறது. இந்தியா கூட்டணி பெருவாரியான இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

News June 1, 2024

தேனி: பெட்டிக்கடையை பார் ஆக்கியவர் கைது!

image

தேனி மதுவிலக்கு அமலாக்க விரிவு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று(மே 31) ரோந்து சென்றனர். அப்போது உப்பார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போதிராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் ஒருவருக்கு கிளாசில் மதுபானம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் கடையை சோதனையிட்டு மது பாட்டில்களை கைப்பற்றி, பெட்டிக்கடையை பார் ஆக்கியதற்காக அவரை கைது செய்தனர்.

News June 1, 2024

கொடைக்கானல்: படகிலிருந்து தவறி விழுந்தவா் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூண்டி ஏரியில், ஜான் ஐசக் என்பவர் நேற்று(மே 31) படகிலிருந்து தவறி விழுந்தார். தொடர்ந்து, நீரில் மூழ்கிய ஜானை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனா்.

News June 1, 2024

திருப்பத்தூர்: டிரைவருக்கு நெஞ்சு வலி! தாறுமாறாக ஓடிய லாரி

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலதை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நேற்று(மே 31) தி.மலையிலிருந்து லாரியில் சிமென்ட் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி மெயின் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் முன்பு சென்றபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. உடனே லாரியை நிறுத்தி, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

News June 1, 2024

செய்யாறு அருகே விபத்தில் தாய் பலி! மகன் படுகாயம்

image

செய்யாறு அருகே கீழ்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி ரேவதி. இவர் தனது மகன் சூர்யாவுடன் செய்யாறு – வந்தவாசி சாலையில் நேற்று(மே 31) மாலை பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி மோதியதில், ரேவதி சக்கரத்தில் சிக்கி பலியானார். பலத்த காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனக்காவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 1, 2024

நீலகிரி பீரிமியர் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

image

நீலகிரி கால்பந்து கழகத்தில் மொத்தம் 44 கால் பந்து அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள்-3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டுக்கான நீலகிரி பீரிமியர் லீக் (என்.பி.எல்) போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று துவங்கின.
இந்த போட்டியில் கோத்தகிரி, ஊட்டி, கூடலூர், பிதர்காடு, ஒரசோலை, ஜெகதளா, எல்ல நல்லி, கேத்தி உள்பட பல்வேறு 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

News June 1, 2024

மர்மக் காய்ச்சலால் இளம்பெண் இறப்பு

image

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் மர்மக்காய்ச்சலால் இளம்பெண் இறந்ததையடுத்து புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பரிசோதனை,ரத்தமாதிரிகளை ஆய்வு செய்து கிராம மக்களுக்கு எந்த காய்ச்சலும் இல்லை.பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார். 

News June 1, 2024

விருதுநகர் போலீஸ் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை எடுத்துள்ளார்.

error: Content is protected !!